CAA-வை திரும்பப்பெற வாய்ப்பே இல்லை – இல கணேசன்

177

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வாய்ப்பே இல்லை என்று, பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இல கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக மாறியுள்ளதாகவும், இதனை திரும்பப்பெறக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

இந்த சட்டம் எந்த நபரையும் பாதிக்காது என கூறிய அவர், ஆனால் இதனை வைத்து பல அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of