பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற ஏர் இந்தியா விமானிக்கு மீண்டும் பணி

236

ஏர் இந்தியா நிறுவன பெண் பைலட்டுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூத்த விமானிக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் மூத்த விமானி கேப்டன் சச்சின் குப்தா. இவர் கடந்த ஆண்டு, ஹைதராபாதில் இளம் பைலட்களுக்கு பயிற்சியாளராக இருந்தார்.

மே, ௫ல், பயிற்சியில் இருந்த பெண் விமானியை இரவு உணவுக்கு வெளியே அழைத்து சென்று அவரிடம் ஆபாசமாக பேசியதோடு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக பெண் விமானி அளித்த புகார் மீது, ஏர் இந்தியா உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தினர். அதன் மூலம் உண்மை கண்டறியப்பட்டு, கேப்டன் சச்சின் குப்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டதுடன் விசாரணை முடியும் வரை, அவர் ஏர் இந்தியா நிறுவனத்திற்குள்நுழைய தடையும் விதிக்கப்பட்டது.விசாரணை குழுவின் முடிவை எதிர்த்து கேப்டன் சச்சின் குப்தா ஏர் இந்தியா நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரிடம் அப்பீல் செய்துள்ளார்.

இந்த அப்பீல் மீதான விசாரணை முடிவடையவில்லை. இதற்கிடையே, கேப்டன் சச்சின் குப்தா மீண்டும் விமான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏர் இந்தியாவின் உயர் அதிகாரி ஒருவர் இதை உறுதி செய்துள்ளார்.

ஏர் இந்தியாவில் பாலியல் புகார்கள் அதிகரிக்கின்றன. அவற்றில் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என அதன் தலைமை நிர்வாக இயக்குனர் அஸ்வானி லோகனி கூறினார்.

ஆனால் பாலியல் புகாரில் தண்டிக்கப்பட்டவருக்கு, மீண்டும் ஏர் இந்தியாவில் பணி வழங்கியது, ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of