எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்..! செந்திலின் தற்போதைய நிலை..!

3689

80-களிலும், 90-களிலும் மிகப்பெரிய ஆளுமை செலுத்திய காமெடி நடிகர்களில் ஒருவர் தான் செந்தில். இவரும், கவுண்டமணி சேர்ந்து செய்த லூட்டிகள் எண்ணில் அடங்காதவை.

அந்த வாழைப்பழக் காமெடிக்கும் சரி, பெட்டர்மாஸ் லைட் காமெடிக்கும் சரி இன்றளவும் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு இருவரும் சேர்ந்து செய்த காமெடிகள் எவர் க்ரீன்.

வெள்ளித்திரையில் பல டைமிங் காமெடிகள் மூலம் கலக்கிக்கொண்டிருந்த செந்தில், தற்போது சின்னத்திரைக்கு வரவுள்ளார். ஆம் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இருவர்களில் மற்றொருவரான கவுண்டமணி, உடல்நிலை மிகவும் மோசமாகிய நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.