அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள்

355

அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க பல்வேறு மாநிலங்களில் 12 தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நீதிமன்றங்கள் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்தது. இதைதொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, டெல்லியில் 2 தனி நீதிமன்றங்களும், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தலா ஒரு தனி நீதிமன்றமும் அமைக்கப்பட உள்ளதாக தெரித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைப்பதில் மத்திய அரசு இன்னும் முழுஅளவில் தயாராகவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். கட்டாய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தி உள்ளதாகவும் எச்சரித்தனர்.