ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – போராடி தோல்வி அடைந்த செரீனா

634

தற்போது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 5ம் நாளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியாவின் நம்பர் ஒன் வீராங்கனை ரஷ்யாவின் எலனா ரைபாகிளா ஆகியோர் மோதினர். இதில் ஆஷ்லே பார்டி 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதேபோல அன்று நடந்த இன்னொரு மகளீர் போட்டியில் அமெரிக்காகவின் புகழ் பெற்ற நட்சத்திர ஆட்டக்காரர் செரீனா வில்லியம்ஸ் சீனாவின் குயாங் வாங்க்வுடன் பலப்பரீட்சை நடத்தினர். இதில் செரீனா முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தார். அடுத்து நடந்த இரண்டாவது செட்டிலும் 2-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட செரீனா 7 (7)-6 (2) என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

ஆனால் இந்த போட்டியின் இறுதியில் அமெரிக்காவின் நட்சத்திர நாயகி செரீனா போராடி தோல்வியை தழுவினார். 24-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை குறிவைத்து இருந்த செரீனா வில்லியம்ஸ் 27ம் நிலை வீராங்கனையான குயாங் வாங்க்கிடம் தோற்றது அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of