முதல் போட்டியில் வெற்றி – அசத்திய செரீனா வில்லியம்ஸ்

420

செரீனா வில்லியம்ஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரபல டென்னிஸ் வீராங்கனை இவர் 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்றார். அதற்கு பிறகு கர்ப்பிணியாக இருந்த இவர் டென்னிஸில் இருந்து விலகினார். குழந்தை பிறந்த பிறகு தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த அவர், மீண்டும் டென்னிஸில் ஆதிக்கம் செலுத்தினார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது ஓபன் டென்னிஸ் தொடர்கள்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் விளையாடிய செரீனா வில்லியம்ஸ் பொட்டாபொவா என்ற வீராங்கனையை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-0, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். மீண்டும் களமிறங்கியுள்ள செரீனா வில்லியம்ஸ் இந்த தொடரின் முதல் வெற்றியை பெற்றுள்ளது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of