இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஈஸ்டர் நாளில் சோகம்

1041

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அச்சம், பலர் படுகாயம். இந்த விபத்தில் மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை உற்ச்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்துவர்கள் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தினார்கள்.

இந்த நிலையில் இலங்கை கொச்சிக்கடாவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திலும், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு தேவாலயத்திலும், கிங்ஸ்பெரி தேவாலயத்திலும், பட்டிக்கலாவ் தேவாலயம் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

நான்குமே கொழும்பில் உள்ள மிக முக்கியமான கிறிஸ்துவ தேவாலயங்கள் ஆகும். மேலும் சின்னமன் கிராண்ட் என்கிற 5 நட்சத்திர விடுதியிலும், ஷங்கிரி லா என்கிற 5 நட்சத்திர விடுதியிலும் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் 100-க்கும் மேற்ப்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அச்சம், 200க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகமாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை இந்த குண்டுவெடிப்பிற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல் காரணமாக கொழுப்பில் தற்போது மீண்டும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பெரிய அளவில் ராணுவப்படை கொழும்பில் களமிறக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

#SriLankaSerialBombBlast #SriLankaBombBlast #ColomboSerialBlast

Advertisement