சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..!

279

வரும் 31-ஆம் தேதி அன்று சந்தானத்தின் சர்வர் சுந்தரம் என்ற படமும், டகால்ட்டி என்ற படமும் ஒரே நாளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் பாதிப்படைவார்கள். எனவே இரண்டு படத்தில் ஏதேனும் ஒன்றை வேறு தேதியில் வெளியிட வேண்டும் என பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில் சென்னை வடபழனியிலுள்ள பிரசாத் லேபில் இயக்குனர் பாரதிராஜா, டகால்டி திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்திரி மற்றும் சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கே.ராஜன் ஆகியோர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

இறுதியில் டகால்ட்டி திரைப்படத்தை 31-ஆம் தேதியும், சர்வர் சுந்தரம் திரைப்படத்தை பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடுவதாக இரண்டு திரைப்படத்தின் தயாரிப்பாளர்களும் ஒரு மனதாக முடிவு செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of