மீண்டும் காக்கிசட்டை அணியும் சேதுபதி

566

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடைப்போட்ட படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 என சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் பல படங்கள் அடுத்து பாகத்திற்கான பேச்சிவார்த்தை நடத்தியும் வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சேதுபதி படத்தையும் இரண்டாம் பாகம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி – ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்து இருந்தனர்.இப்படத்தை அருண்குமார் இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வலம் வருவார். இரண்டாம் பாகத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாகவே வருகிறார்.

இதற்கிடையே அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சிந்துபாத் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெளியாகிய இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Advertisement