சேலம் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் பலி.

591

சேலம் அருகே இன்று அதிகாலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, மாமாங்கம் பகுதியில் பழுதாகி சாலையோரம் நின்றிருந்த சரக்கு வேன் மீது எதிர்பாரதவிதமாக மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் தடுப்பை தாண்டி, எதிர் திசையில் வந்த சொகுசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது சாலையில் கவிழ்ந்த சொகுசு பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சேலத்தில் இருந்து சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால்தான் விபத்து ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.

Advertisement