இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்! 7 பேர் கைது!

646

உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை உற்ச்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்துவர்கள் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தினார்கள்.

இந்நிலையில் இலங்கை கொச்சிக்கடாவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திலும், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு தேவாலயத்திலும், கிங்ஸ்பெரி தேவாலயத்திலும், பட்டிக்கலாவ் தேவாலயம் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

மேலும் சின்னமன் கிராண்ட் என்கிற 5 நட்சத்திர விடுதியிலும், ஷங்கிரி லா என்கிற 5 நட்சத்திர விடுதியிலும் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் பெரும்பாலானவை தற்கொலைப்படை தாக்குதல்கள் என்று இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தனா தெரிவித்துள்ளார்.