துணை வேந்தர்கள் நியமனங்களில் பல கோடி ரூபாய் பணம் கைமாறியது உண்மைதான்

661

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களில் பல கோடி ரூபாய் பணம் கைமாறியது வெட்ட வெளிச்சமானது என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கல்வியாளர்கள் சார்பில் புலமை வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் துணைவேந்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கலைஞருக்கு புகழாரம் சூட்டினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களில் பல கோடி ரூபாய் பணம் கைமாறியது அனைவரும் அறிந்ததே என்றார்.

இதுகுறித்து தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் ஊழல் துணைவேந்தர்கள் மூலமாக நியமனம் செய்யப்பட்ட, தகுதி இல்லாத ஆசிரியர்களை நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Advertisement