பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இல்லை!

1002

இந்தியாவில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை விதிக்கப்பட்டாலும், அவற்றை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் காணப்படவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தில் பேசிய அவர், நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செய்திகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்தார்.

பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தண்டனை அதிகரிக்கப்பட்டு, ஒரு சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டலும், அவற்றை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் மகள்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Advertisement