தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற பெண்.. வம்பிழுத்த 4 பேர்..! இறுதியில் நடந்த கொடூரம்

1315

கடலூர் அருகே கணவரை பிரிந்து ஜெகன் என்பவருடன் வசித்து வரும் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், படம் பார்ப்பதற்காக திரையரங்கம் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி, பிரபாகரன் ஆகிய 4 பேர், அந்த பெண்ணை கேலி செய்ததாகவும், அந்த பெண் செருப்பை எடுத்து காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நால்வரும் 5 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகார் அளித்ததன் பேரில் ஆள்கடத்தல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement