பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நபரை சரமாரியாக தாக்கிய பெண் காவலர்

316

உத்தரபிரதேசத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பெண் காவலர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரின் பிதூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.

இந்தநிலையில், பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதை கண்ட பெண் காவலர் பாலியல் தொல்லை கொடுத்த நபரை சரமாரியாக தாக்கினார். தொடர்ந்து அவரை கைது செய்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of