மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தலைமறைவு

333

சென்னையை அடுத்துள்ள உத்தண்டி பகுதி பள்ளியில் 13வயது 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் மாநில அளவில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பவர். இவர் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளதால் தினந்தோறும் உத்தண்டியில் உள்ள கடற்கரையில் மேற்கொள்வது வழக்கமாய் கொண்டுள்ளார்.

இவருக்கு உடற்பயிற்சி சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாளராக திருவொற்றியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் இருந்து வந்தார். இந்நிலையில் மாணவியிடம் உடற்பயிற்சி கற்றுக்கொடுக்கும் போது மாணவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனை அந்த மாணவி தனது பொற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். பெற்றோர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் பயிற்சியாளர் மேல் புகார் கொடுத்தனர் புகார் அடிப்படையில் போலீஸார் பயிற்சியாளர் மகேஷ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of