“என்ன கவின் இப்படி பண்ணிட்டிங்க!” அனைத்தையும் முறித்துக்கொண்ட சாக்ஷி!

1262

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கி தற்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் எகிறிக்கொண்டு போகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய போது, வனிதாவால் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்கு அதிகரித்துக்கொண்டு இருந்தது.

அவர் வெளியானதில் இருந்து, கவின் செய்யும் சிறு சிறு குறும்புத்தனங்கள் மூலம் இந்த ஷோவின் டி.ஆர்.பி ரேட்டிங் அதிகரித்துள்ளது. கவின் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பெரும்பாலும் பெண்கள் உடன் நெருங்கிப் பழகுகிறார் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின் போது, பிக்-பாஸ் ஹவுஸ் மேட்ஸ்-க்கு சாக்கலெட் கொடுக்கிறார். அதில் சாக்ஷிக்கு கொடுத்த சாக்லேட்டை அவர் கவினுக்கு கொடுக்கிறார். கவின் அவரிடம் இருந்த சாக்லேட்டை, லாஸ்லியாவுக்கு கொடுத்து விடுகிறார்.

இதனை அறிந்த சாக்ஷி கவினிடம் சண்டைப்போட்டு விட்டு, என் உணர்வுகளுடன் விளையாடாதே, எல்லாத்தையும் இதோடு நிறுத்திக்கொள். எல்லாம் முடிந்து விட்டது. இனிமே நான் உன்னிடம் பேச மாட்டேன். என்று கூறிவிட்டு அவருடனான பழக்கத்தை சாக்ஷி முறித்துக்கொண்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள், என்ன கவின் இப்படி பண்ணிட்டிங்க, இப்படியெல்லாம் பண்லாமா என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement