90’s Kids-க்கு சக்திமான் சொன்ன ஒரு நல்ல செய்தி

452

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் பொழுதுபோக்கு சாதனமாக தற்போது தொலைக்காட்சி இருக்கிறது. மக்களின் பொழுதுபோக்கை கருத்தில் கொண்டு முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்கள் விரும்பும் படம் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பலரால் பேசப்படும் ரமயாணம் மற்றும் மகாபாரதம் போன்ற கதைகள் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிரபல தொலைக்காட்சியான தூர்தர்ஷன் பழைய சீரியல்களை வரும் நாட்களில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.

அந்த வரிசையில், 1997 முதல் 2005ம் ஆண்டு வரை சுமார் 8 ஆண்டுகள் நம்பர்.1 இடத்தில் இருந்தது சக்திமான் சீரியல், இந்த சீரியல் 90களில் பிறந்தவர்கள் அதிகம் விரும்பி பார்க்கப்பட்டவை ஆகும்.

தற்போது மீண்டும் ஒளிபரப்ப இருப்பதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என சக்திமான் தொடரின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் முகேஷ் கண்ணணா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of