கமலின் இந்தியன்-2

598

வரும் 18-ந் தேதி கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கமல் – காஜல் ஜோடியாக நடிக்க ஷங்கர் டைரக்டு செய்கிறார்.

திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிந்து தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் தேர்வு செய்துவிட்டனர்.

கடந்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று சமூக வலைத்தளங்களில் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால், படக்குழுவினர் இதனை மறுத்து வருகிற 18-ந் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்து உள்ளனர்.

இதற்காக கமல் பொள்ளாச்சியில் சில வாரங்கள் முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

கவுரவ தோற்றத்தில் சிம்பு  வருகிறார். தனக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்ற தேவையில்லை என பெருந்தன்மையுடன் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசன் வயதானவராகவும், இளைஞராகவும் 2 வேடங்களில் வருகிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of