23-ஆம் புலிகேசி பிரச்சனை..! பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

2815

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கும், காமெடிகளின் பிரம்மாண்டம் நடிகர் வடிவேலுவுக்கும் இடையே கடந்த சில தினங்களாக பிரச்சனைகளும், மனக்கசப்புகளும் இருந்து வந்தது.

இந்த பிரச்சனைக்கு காரணம், ஊருக்கு தெரிந்த விஷயம் தான். 23-ஆம் புலிகேசி வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் முடிவு செய்திருந்த நிலையில், அதிலும் வடிவேலுவே நடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு சில  காரணங்களுக்காக 23-ஆம் புலிகேசியின் 2-ஆம் பாகத்தில் இருந்து வடிவேலு நீக்கப்பட்டார்.

இதனால், ஷங்கருக்கும், வடிவேலுவுக்கும் இடையே பிரச்சனைகள் இருந்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசனின் 60 ஆண்டுகால திரையுலக வாழ்வை கொண்டாடும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை “உங்களில் நான்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் சங்கர், நடிகர் வடிவேலு உட்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வடிவேலு பேசிய காமெடி பேச்சுக்கு, ஷங்கர் விழுந்து விழுந்து சிரித்தது, ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல், ஷங்கர் அந்நிகழ்ச்சியில் பேசியபோது, குசேலன் படத்தில் வடிவேலு அவர்கள் எப்படி ரஜினி சாரை பார்த்து வியப்பில் நின்றாரோ!! அதே போல் தான் நான் கல்லுரி படிக்கும் போது கமலஹாசனை முதன் முதலில் பார்க்கும் போது வியந்து போய் நின்றேன் என்று கூறினார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையே உள்ள பிரச்சனை தீர்ந்துள்ளது என்றும், மீண்டும் இவர்களின் கூட்டணியில் 23-ஆம் புலிகேசியின் 2-ஆம் பாகம் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of