அஜித் ரசிகர் செய்த விபரீதம்..! சாந்தனு போட்ட அதிரடி டுவீட்..!

719

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில், டெல்லி கணேஷ், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சத்யம் திரையரங்கில் நேர்கொண்ட பார்வை படத்துக்கான டிக்கெட் பிரச்னையில் தனக்கு அருகில் இருந்த நபர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க தீப்பெட்டி தேடிக் கொண்டிருந்ததாகவும், அவரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் பதிவிட்டுள்ளார்.