அவர் ஒரு “தீவிரவாதி” ? விஜயசாந்தி ஆவேசம்.

251
vijayashanthi10.3.19

தெலுங்கானா, ஷம்ஷாபாத்தில் திரு. ராகுல் காந்தி அவர்களின் தலைமையில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசிய முன்னாள் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான “விஜயசாந்தி” அவர்கள் பிரதமர் மோடி அவர்களை “தீவிரவாதிகளுடன்” ஒப்பிட்டு பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் பேசியபோது மோடி அவர்களை பார்க்கும்போது ஒரு தீவிரவாதியை பார்ப்பது போல உள்ளதாகவும், மக்கள் அனைவரும் அவர் அடுத்த என்ன “வெடிகுண்டை” வீசுவார் என்ற பதட்டத்திலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய ராகுல் அவர்கள் மோடி இரு வகை இந்தியர்களை உருவாகியுள்ளதாகவும், ஒரு வகை இந்தியர்கள் அனில் அம்பானி போன்று தனி விமானத்தில் பறந்து செல்வதாகவும், இன்னொரு வகை இந்தியர்கள் கையேந்தி கடன் கேட்டும் விவசாயிகளாக உள்ளனர் என்றும் கூறினார்.