பேட்ஸ் மேன் ஆன ஷர்துல் தாக்கூர்!! சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி..

350

விஜய் ஹசாரே தொடரில் சில வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி அசத்திவருகின்றனர். மும்பை மற்றும் இமாச்சல பிரதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி, சூர்யகுமார் யாதவ், ஆதித்ய தரே மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் 50 ஓவரில் 329 ரன்களை குவித்தது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆதித்ய தரே ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், 75 பந்தில் 91 ரன் அடித்து சூர்யகுமார் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தரேவும் ஷர்துல் தாகூரும் சேர்ந்து சிறப்பாக ஆடினர்.

ஆதித்ய தரே 88 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் 57 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்தார். ஷர்துல் தாகூரின் பேட்டிங் இப்போது நன்றாக மேம்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து ஷர்துல் தாகூர் ஆடிய அருமையான இன்னிங்ஸ் தான் இந்திய அணியை காப்பாற்றியது.

ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடும் ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் இப்படி பட்டையை கிளப்புவது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement