‘தூசி’யில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 13 பெண்கள் படுகாயம்..!

325

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாங்கால் கூட்ரோட்டில் தனியார் ஷு கம்பெணி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 13 பெண் ஊழியர்கள், ஒரு ஷேர் ஆட்டோவில் தூசி ஊராட்சி நோக்கி வந்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த பள்ளத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஆட்டோவில் இருந்த பெண் ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்திற்கு காரணமான ஷேர் ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர். ஆட்களை அதிகமாக ஏற்றி செல்வதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of