குளித்துக்கொண்டிருந்த இளம்பெண்: சுறாக்கள் தாக்கி பலி!

657

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் டோரன்ஸ் நகரை சேர்ந்தவர் ஜோர்டன் லிண்ட்சே (வயது 21). கல்லூரி மாணவியான இவர் விடுமுறையை கொண்டாட தனது குடும்பத்துடன் கரீபியன் நாடுகளில் ஒன்றான பகாமாஸ் சென்றார்.

அங்குள்ள பிரபல சுற்றுலா தலமான ரோஸ் தீவுக்கு சென்ற ஜோர்டன் லிண்ட்சே, கடலில் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தார். அப்போது ஆழ்கடலில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்த ஜோர்டன் லிண்ட்சேவை 3 சுறாக்கள் தாக்கின. அவரது கால், கை உள்ளிட்ட இடங்களில் பலமாக கடித்து குதறின.

இதில் அவரது வலது கை துண்டானது. ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த ஜோர்டன் லிண்ட்சேவை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of