ஷாருக் கான் பிறந்த நாளை கொண்டாடிய துபாய்.. – நெகிழ்ச்சியில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஷாருக்..!

406

துபாயில் உள்ள, உலகிலேயே அதிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பெயர் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது 54 பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரை பிரபலங்களும் ஏராளமான ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் உலகின் மிக உயரமான துபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, அவர் பெயர் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.

ஷாருக்கான் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’ பட பாடல், பின்னணியில் இசைக்க, அந்த கட்டிடத்தில் எழுதப்பட்டுள்ள ஷாருக் பெயரை, ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். ‘ஹேப்பி பர்த்டே…கிங் ஆப் பாலிவுட்’ என்ற எழுதப்பட்டிருந்த இந்த வீடியோவை, ஷாருக்கான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘என்னை இதுபோன்று பிரகாசமாக ஜொலிக்க வைத்ததற்கு நன்றி. உங்கள் அன்பும் பாசமும் மீற முடியாதது. இது நான் இதுவரை பார்த்திராத உயரம். நன்றி துபாய். இன்று என் பிறந்த நாள், நான் உங்கள் விருந்தினன்’ என்று குறிப்பிட்டுள்ள ஷாருக்கான், துபாய் ஆட்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement