சத்ருகன் சின்ஹா மனைவி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்

326

நடிகர் சத்ருகன் சின்காவின் மனைவியும், நடிகையுமான பூனம் சின்கா சமாஜ்வாடி கட்சியில் நேற்று இணைந்தார்.

நடிகரும் பாஜக எம்.பி யுமான சத்ருகன் சின்ஹா கடந்த சில மாதமாக பாஜக விற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை வைத்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

sinha-samajwadi

இந்த நிலையில் அவரது மனைவி பூனம் சின்ஹா, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை லக்னோவில் சந்தித்து அவர் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.