படக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்கின் ஜோடி | Karthick | Sulthan

227

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான கார்த்திக்கின் தேவ் திரைப்படம் சரிவர செல்லாத சோகத்தில் இருந்த நடிகர் கார்த்திக் அவர்கள், தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

Karthick

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி’ படத்தில் நடிக்கிறார். பெரும்பாலும் சிறைச்சாலைக்குள் காட்சிகள் நடைபெறுவதாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லை.

rashmii

இதையடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கார்த்தி நடிக்கிறார். கார்த்தி-ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

rashmika

இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில் சுல்தான் படப்பிடிப்பில் இருப்பதாக பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த படக்குழு அதிருப்தி அடைந்தனர். இதனால் சில மணிநேரங்களில் அந்த பதிவை நீக்கிய ராஷ்மிகா, படக்குழுவினரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of