நிர்வாகத்தை பற்றி குறை கூற கிரண்பேடிக்கு எந்த தகுதியும் இல்லை

484

தமிழக அ.தி.மு.க. அரசைப்பற்றியும், அதன் நிர்வாகத்தை பற்றியும் குறை கூற புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எந்த தகுதியும் இல்லை என்று அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிதண்ணீருக்கு மாற்று ஏற்பாடாக தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்வரும் பல கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சின்னஞ்சிறு யூனியன் பிரதேசமான புதுவை மாநில கவர்னர் கிரண்பேடி வழக்கம் போல் தனது மலிவு விளம்பரத்துக்காக இப்பிரச்சினையில் தமிழக அரசை குறை கூறி உள்ளதை புதுவை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுகவை பற்றி தான் கூறிய கருத்து தமிழக மக்களின் கருத்து என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கிரண் பேடி தற்போது தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of