ஷீலா தீட்சித் காலமானார்! பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்!

301

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஷீலா தீட்சித். டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த இவர், தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

மேலும், இவர் 2014ம் ஆண்டு கேரள மாநில ஆளுநராகவும் சிறிது காலம் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போர்ட்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

இவரது இறப்பிற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர், ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of