ஆடு திருடிய இளைஞர்கள்

773

புதுச்சேரியில், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் ஆடு திருடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

புதுச்சேரி, குருமாம்பேட் ஹவுசிங் போர்டு பகுதியில், தொடர்ந்து சில நாட்களாக ஆடுகள் காணாமல் போவதாக கூறப்படுகிறது.

யார் ஆடுகளை திருடி செல்கின்றனர் என்று பொதுமக்கள் அச்சத்தில் இருந்த நிலையில், அப்பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள், ஆடுகளுக்கு தழைகளை உணவாக கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கிருந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தப்படியே, ஆட்டை லாவகமாக திருடி சென்றுள்ளனர்.

இந்த காட்சிகள் அங்குள்ள CCTV கேமிராவில் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் இந்த காட்சிகளை கொண்டு, ஆட்டை திருடி சென்ற இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement