டெல்லி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் ஷீலா தீட்சித்

405

காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவராக பொறுப்பு வகித்து வந்த அஜய் மக்கான் உடல் நலக்குறைவால் சமீபத்தில் பதவி விலகினார். இதையடுத்து, டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் (வயது 80), புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரது பதவியேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் நடைபெற்றது. அப்போது டெல்லி காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதேபோன்று தேவேந்தர் யாதவ், ஹரூண் யூசுப் மற்றும் ராஜேஷ் லிலோத்யா ஆகிய 3 பேரும் புதிய செயல் தலைவர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.

விழாவில், கட்சியின் மூத்த தலைவர்கள் கரண் சிங், ஜனார்த்தன் திவேதி, மீரா குமார், பிசி சாக்கோ, சந்தீப் தீக்சித், அஜய் மக்கான் ஆகியோர் பங்கேற்றனர்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக கூறிய தீட்சித், இதற்கு அடிமட்ட தொண்டர்களின் உதவி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், பாராளுமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற முழு முயற்சியுடன் காங்கிரஸ் கட்சி பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of