வனிதா சொன்ன மோசமான வார்த்தை..! கதறி கதறி அழுத ஷெரின்..! பிரிந்துப்போன தர்ஷன்..?

1091

பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் வனிதா விஜயக்குமார். சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர், பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லா ஹவுஸ் மேட்ஸ்களிடமும் பிரச்சனையை வளர்த்துக்கொண்டிருந்தார்.

இதனால் இவர் நாமினேசனில் வந்த போது மக்களின் ஆதரவு இல்லாமல் வெளியேறினார். மீண்டும் வைல்ட் கார்டு என்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்த வனிதா ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தரை அழ வைத்து வருகிறார். அந்த வகையில் இந்த ஷெரினை கதற கதற அழ வைத்துள்ளார்.

வனிதா தர்ஷனுடனான உறவை கைவிடும்படி ஷெரினுக்கு அட்வைஸ் செய்தார். அப்போது ஷெரினுக்கு தர்ஷன் மீது அஃபையர் இருப்பதாக கூறினார். இதனைக்கேட்டு கடும் கோபமடைந்த ஷெரின், வனிதாவை மிகவும் ஆவேசத்துடன் திட்டினார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில், ஷெரின் அழுதுக்கொண்டு இருக்கிறார். அருகில் வந்த சேரனிடம், அந்த மாதிரி வார்த்தையை எப்படி யூஸ் பண்ணலாம் சார்? நான் எப்படி சார் சும்மா இருக்க முடியும்.

எனக்கு அந்த பையனோடையும் பேச வேண்டாம் வனிதாவுடனும் பேச வேண்டாம் என்று ஷெரின் கூறுகிறார். மற்றொரு பக்கம் தர்ஷன் புல் தரையில் படுத்துக்கொண்டு, சோகமாக இருக்கிறார்.

அதோடு அந்த புரோமோ வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், வனிதாவை திட்டியும், ஷெரினுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஷெரின் தர்ஷனிடம் பேச மாட்டேன் என்று கூறியதால், இவர்களின் நட்பு இனி தொடர்வதற்கு வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement