”உலக கோப்பையை விட்டு நிரந்தரமாக வெளியேறுகிறேன்” – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தவான்

879

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் காயத்திலிருந்து மீளாத நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

லண்டனில் கடந்த 9ம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சதமடித்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்தில் காயமடைந்தார். இதில் ஷிகர் தவானின் இடது கை பெருவிரலில் முறிவு ஏற்பட்டது.

காயம் காரணமாக அடுத்த மூன்று ஆட்டங்களில் அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஷிகர் தவான் முழுமையாக குணமடைய ஒரு மாதம் ஆகலாம் என்ற நிலையில், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பரும், இளம் வீரருமான ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும், ஐபிஎல் ஆட்டங்களில் ரிஷப் பந்த் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தனது கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் ஆறாமல் போனதால் உலகக்கோப்பை 2019 தொடரில் இனி வரும் போட்டிகளில் தான் விளையாட மாட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Advertisement