பக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு..! கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..!

203

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தல்பீர் சிங். இரண்டு முறை பஞ்சாயத்து தலைவராக இருந்த இவர், சிரோன்மணி அகாலி தளம் என்ற கட்சியின் மாவட்ட துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.

சண்டை முற்றிய நிலையில், பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தல்பீர் சிங்கை சுட்டுக்கொலை செய்துவிட்டு, அவரது இரண்டு கால்களையும் வெட்டி வீசினார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தல்பீர் சிங்கின் கொலை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.