தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பும் சிவசேனா.., பாஜக-வின் பதில்?

133

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்கு உள்பட்ட பலகோட் பகுதிக்குள் புகுந்து அங்குள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது நமது விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மத்திய அரசுதரப்பில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. ஆனால், மத்திய மந்திரிசபையில் இடம்பெறாத பாஜக தலைவர் அமித் ஷா, அந்த தாக்குதலில் சுமார் 250 கொல்லப்பட்டதாக சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதால் தற்போது இதுதொடர்பான சர்ச்சை தலைதூக்கியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது விமானப்படை நடத்திய தாக்குதல் கொல்லப்பட்ட எதிரிகளின் எண்ணிக்கையை அறியும் உரிமை இந்தியர்களுக்கு உண்டு என பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனாவும் இன்று வலியுறுத்தியுள்ளது.