விடைபெற்ற மாலிக்..! – வழியனுப்பிய பாக்.வீரர்கள்..!

617

உலக கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் 37 வயதான சோயிப் மாலிக் ஓய்வுபெற்றதை அடுத்து, சக வீரர்கள் அவரை தோளில் சுமந்தபடி சென்றனர்.

சோயிப் மாலிக் இதுவரை 287 ஓரு நாள் போட்டிகளில் விளையாடி 7ஆயிரத்து 534 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று ஒரு நாள் போட்டிகளில் 158 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.