3 ஆயிரம் பேரை அதிர வைத்த புகைப்படம்.. ஆனால் கடைசியில் இதுதானா..

78347

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பெர்டியோ கீ என்ற கடற்கரை பகுதியில், பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்கு மனித உடல் தலை வெட்டிய நிலையில், கிடந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அந்நாட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தவர்கள், அந்த உடலை ஆய்வு செய்துள்ளனர்.

அதில், சாலையில் கிடந்தது மனித உடல் அல்ல என்றும், துணிகளை அழங்கரிப்பதற்காக, துணிக்கடைகளில் இருக்கும் பொம்மை என்றும் தெரியவந்தது.

மேலும், அந்த பொம்மை நீண்ட நாட்களுக்கு முன்னர், கடலில் விழுந்திருக்கலாம் என்றும், அப்போது, அதில் கடல் பாசிகளும், சிறிய அளவிலான கடல் உயிரினங்களும் படிந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புகைப்படத்தை முதலில் பார்த்த நெட்டிசன்கள், மனித உடல் என்றே அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், பதிவை முழுவதுமாக படித்த பின்னரே விஷயம் என்னவென்று புரிந்தது.

Advertisement