ஜெ. மருத்துவ செலவு : பகீர் ரிபோர்ட்

559

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ செலவுக்கு ரூ. 6.85 கோடி செலவாகி இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளர்.

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் 75 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த கருத்துக்களை அடுத்து ஜெயலலிதா மறைவுக் குறித்து நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது ஆன மருத்துவ செலவுகள் குறித்த அப்போலோ மருத்துவமனை சார்பில் விசாரணை ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் மொத்தமாக ரூ. 6.85 கோடி மருத்துவத்துக்கு செலவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் லண்டன் மருத்துவர் ரிச்செர்ட் பீலேவுக்கு ரூ. 92.7 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிசியோதிரப்பிக்கு ரூ. 1.29 கோடி, அறை வாடகை ரூ. 24.19 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 நாட்கள் ஜெயலலிதாவின் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவாகி உள்ளது. மேலும் இன்னும் 44.56 லட்சம் பாக்கி இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement