பாஜக பிரமுகர் மீது காலணி வீச்சு! செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு!

355

பாஜக செய்தித் தொடர்பாளரான நரசிம்ம ராவ், டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அரங்கில் இருந்த ஒருவர், தாம் அணிந்திருந்த ஷூவை கழற்றி, நரசிம்ம ராவ் மீது எறிந்தார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

ஷூ வீசிய நபர் தன்னை ஒரு மருத்துவர் என அடையாளப்படுத்தியுள்ளார். அவரை உடனடியாக பாதுகாவலர்கள் வெளியேற்றியுள்ளனர்.

காலணியை வீசிய நபர் ஒரு வழக்கறிஞர் என்பதும், அவரது பெயர் சக்தி பார்கவ் என்பதும், அவர் உத்தரப்பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. எதற்காக வீசினார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of