சென்னை அண்ணாசாலை பெரியார் சிலை மீது காலணி வீசியதை கண்டித்து சாலை மறியல்

516

சென்னை அண்ணாசாலை பெரியார் சிலை மீது காலணி வீசியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தை பெரியாரின் 140வது பிறந்ததினத்தை யொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பெரியார் சிலை மீது திடீரென காலணியை வீசினார். . இதனை கண்டித்து தொல். திருமாவளன் தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

காலணி வீசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இதற்கிடையே பெரியார் சிலையை அவமதித்தவரை போலீசார் கைது செய்தனர்.