டாஸ்மாக் ஊழியர்களுக்கு மர்ம ஆசாமிகள் துப்பாக்கி சூடு..!

356

செங்கம், பெருமுட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பாவையாளர் சண்முகம், விற்பனையாளர் லட்சுமணன் ஆகியோர் இரவில் கடையை மூடியுள்ளனர்.அப்போது, இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்தவாறு வந்த 2 பேர், தாங்கள் வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த சண்முகம் பணத்துடன் ஓட முயன்றபோது அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டனர். எனினும் பணத்துடன் அவர் அங்கிருந்து தப்பினார்.

விற்பனையாளர் லட்சுமணனை மடக்கி பிடித்த மர்ம நபர்கள், அவரை சராமாரியாக தாக்கியதுடன் மூடிய டாஸ்மாக் கடையை திறக்க வைத்தனர். கடைக்குள் பணம் இல்லாததால் லட்சுமணனை விட்டுவிட்டு மர்ம ஆசாமிகள் தப்பினர்.

காயமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த செங்கம் போலீசார், அங்கிருந்த தோட்டாக்களை கைப்பற்றினர். துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிய நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of