பாகிஸ்தானுக்கு ஆப்படித்த இந்தியா ..,

981

புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது இருப்பது தெரியவந்தது.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் உற்பத்தியாகும் நதிகளின் நீரை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியிருந்தார்.

இந்திய விவசாயிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போன்ற இடங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு தக்காளி உள்ளிட்ட பலவகை காய்கறிகள் அனுப்புவது வழக்கமாக இருந்தது.

ஆனால் புல்வாம தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விவசாயிகள் பாகிஸ்தானுக்கு காய்கறிகளை அனுப்ப மறுத்து ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.

இதன் காரணமாக பாகிஸ்தானில் தக்காளி விலை கிலோ ரூ. 250 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள் அனுப்பப்பட்டு வந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தினமும் 3 ஆயிரம் டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

பாகிஸ்தான் மற்ற நாடுகளிடம் இருந்து பெறுவதை விட இந்தியாவிடம் இருந்தே பாகிஸ்தான் குறைந்த விலையில்  பெற்று வந்தது. தற்போது காய்கறி ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும் பாகிஸ்தானில் பச்சை மிளகாய் கிலோ ரூ. 160-க்கும், சிவப்பு மிளகாய் ரூ. 300-க்கும், இஞ்சி ரூ. 150-க்கும், உருளைக்கிழங்கு ரூ. 70-க்கும், வெங்காயம் ரூ. 90-க்கும், கத்தரிக்காய், வெண்டைக்காய் தலா ரூ. 110-க்கும் விற்கப்படுகிறது.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of