தூங்கவா ? இல்ல கொசுக்களை எண்ணவா ? கிண்டல் ட்வீட் ?

89
central7.3.19

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லையில் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தன. அப்போது 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் இறந்தனர் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இதற்கு பதில் அளித்த விமானப்படை தளபதி தனோவா, பயங்கரவாதிகள் சாவு எண்ணிக்கையை எண்ண இயலாது என தெரிவித்தார். இந்நிலையில் மத்திய மந்திரி வி.கே.சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் நேற்று அதிகாலையில் தூங்கிய போது கொசுக்கள் என்னை கடித்தன. இதனால் நான் கொசு மருந்து தெளித்தேன். அப்போது பல கொசுக்கள் இறந்தன. அந்த நேரத்தில் எழுந்து இறந்த கொசுக்களை எண்ண வேண்டுமா? அல்லது நிம்மதியாக நான் தூங்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.