கைவிரல் மையை காண்பித்தால் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் ?

442

தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் நாளன்று ஓட்டுபோட்டதற்கு அடையாளமாக கைவிரலில் உள்ள மையை காண்பித்தால் மாலை 6 மணிக்கு மேல் ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

மக்களிடையே வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக அனைத்து ஓட்டல்களிலும் தேர்தல் தினத்தன்று இந்த தள்ளுபடியை நடை முறைபடுத்துகிறோம் என்று அந்த சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடசுப்பு கூறினார்.

மேலும் பேசிய வேங்கடசுப்பு சென்னை முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன. இதில் 2500 ஓட்டல்கள் எங்களுடைய சங்கத்தில் உள்ளது.

எங்கள் சங்கத்தில் சேராத ஓட்டல்களிலும் 10 சதவீத தள்ளுபடி வழங்குவோம் என்று உறுதி அளித்துள்ளார். எங்களது அறிவிப்பை சமூக வலைதளங்களில் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். வருகிற 17-ந்தேதி ஓட்டல்கள் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்க உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of