கம்பம் ஏறிய காவலர், செல்ஃபி எடுத்த துணை ஆய்வாளர்.

441
subinspecr12..3.19

உத்தரபிரதேசம், உன்னாவ் என்ற இடத்தில், கம்பத்தில் பாதுகாப்பு கருவிகள் இன்றி ஏறி விளம்பர பலகையை அகற்றிக்கொண்டு இருந்த காவலரோடு செல்ஃபி எடுத்து தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய துணை ஆய்வாளர் மீது ஆய்வுமேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

எம்சிசி உத்தரவின்படி ரகராட்சி மற்றும் காவல்துறைக்கு தேவையற்ற விளம்பர பலகைகளை அகற்ற தொடங்கியுள்ளனர். இந்நிலையில் “அச்சல்கஞ்” என்ற பகுதியில் துணை ஆய்வாளர் ஒருவர் அங்கு ஒரு கம்பத்தில் கட்டியிருந்த விளம்பர பலகையை உடனிருந்த காவலரை அகற்ற சொல்லிவிட்டு, அவர் அகற்றுகையில் அருகில் நின்று செல்ஃபி எடுத்துள்ளார்.

சமூகவலைத்தளங்களின் வழியாக வெளிச்சத்திற்கு வந்த இந்த புகைப்படத்தால், அந்த துணை ஆய்வாளர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிகாபூர் வட்ட ஆய்வாளர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of