“அரசின் அங்கீகாரம்.. கபசுர குடிநீர் பாக்கெட்டு..” – எச்சரித்த சித்த மருத்துவ அலுவலர்

1196

அரசின் அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்படும் கபசுர குடிநீர் பாக்கெட்டுகளை யாரும் வாங்கி அருந்த வேண்டாம் என திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி கே.கே நகரில் இயங்கி வந்த தனியார் சித்த மருத்துவமனையில் கபசுர குடிநீர் தயாரிப்புக்கான பொருட்கள் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் விளம்பரங்களை பார்த்து ஏராளமான பொதுமக்கள் கபசுர பாக்கெட்டுகளை வாங்கி சென்றுள்ளனர்.

ஆனால் உரிய அரசு அங்கீகாரமின்றி கபசுர குடிநீர் பாக்கெட் தயாரித்து விற்பனை செய்வதாக மாவட்ட சித்த மருத்துவ துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், கே.கே நகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் சித்த மருத்துவ மனையில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு அனுமதியின்றி விற்பனை செய்ய வைத்திருந்த 10 கிலோ கபசுர பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தார். மேலும் அனுமதியின்றி கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்ததற்காக தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அரசு அனுமதி இல்லாமல் இது போன்று விற்பனை செய்யும் கபசுர பாக்கெட்டுகளை யாரும் வாங்கி அருந்த வேண்டாம் என திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விற்பனை செய்யும் நபர்களிடம் பொருட்களை வாங்கும் போது தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, தயாரிப்புகான அனுமதி எண் போன்றவை சரியாக உள்ளதா  என அறிந்து கொண்டு, அதற்கான ரசீது கேட்டுப் பெற வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of