சிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் பிரேம் சிங் டமாங்

372

சிக்கிம் மக்களால் பி.எஸ். கோலே என்றழைக்கப்படும் சிக்கிம் கிராந்தி மோர்ச்சா கட்சி தலைவர் பிரேம் சிங் டமாங் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக இன்று பதவியேற்றார். 32 இடங்களை கொண்ட சிக்கிம் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் சிக்கிம் கிராந்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர்கள் 17 இடங்களில் வெற்றி பெற்றனர். சிக்கிம் குடியரசு கட்சி 15 இடங்களை பிடித்தது. இந்நிலையில், சிக்கிம் மக்களால் பி.எஸ். கோலே என்றழைக்கப்படும் சிக்கிம் கிராந்தி மோர்ச்சா கட்சி தலைவர் பிரேம் சிங் டமாங் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக இன்று பதவியேற்றார். காங்டாக் நகரில் உள்ள பல்ஜோர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத், பிரேம் சிங் டமாங்-குக்கு பதவி பிரமாணமும் காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார். பவன் குமார் சாம்லிங் இந்த தேர்தலின் மூலம் சிக்கிம் குடியரசு கட்சி சார்பில் முதல் மந்திரி பவன் குமார் சாம்லிங் தலைமையில் கடந்த 24 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த அரசுக்கு மக்கள் விடையளித்துள்ளனர். இன்று முதல் மந்திரியாக பதவியேற்ற பிரேம் சிங் டமாங் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே, தனது கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் யாரையாவது ராஜினாமா செய்ய வைத்து விரைவில் அவர் அங்கு போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of