‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி

738

மனிதன் தோன்றினான், தோன்றிய மனிதன் பல படைப்புகளை படைத்தான்இறுதியில் படைத்த பொருட்களை வாணிகம் செய்ய தொடங்கினான். ஆரம்ப காலகட்டத்தின் கால்நடைகளை கொண்டு செய்யப்பட்ட வாணிபம் நாளடைவில் வளர்ச்சியடைந்தது, மனிதன் வாணிபம் செய்யும் முறையும் மாறியது. கடல்வழி வாணிபத்தில் கால்பதிக்க தொடங்கினான் மனிதன்.

உலகின் முதல் கடல் வழி வாணிபம் ‘Silk Road’ என்று அழைக்கப்படுகிறது, சீனா மற்றும் ரோமானியப் பேரரசின் முக்கிய பண்டைய நாகரிகங்களை இணைக்கும் இந்த ‘Silk Road’ மிகவும் பிரபலமான பண்டைய வர்த்தக பாதையாகும். ஐரோப்பாவிலிருந்து வரும் கம்பளி, வெள்ளி மற்றும் தங்கத்திற்கு ஈடாக, சீனாவிலிருந்து பட்டு வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த வாணிப சாலையில் வர்த்தகம் பரவுவதோடு, அறிவு, தொழில்நுட்பம், மற்றும் கலைகள் பரவுவதற்கான ஒரு முக்கிய பாதையாகவும் இந்த ‘Silk Road’ மாறியது, இக்காலத்தில் நவீன உஸ்பெகிஸ்தானில் சமர்கண்ட் போன்ற பல வர்த்தக மையங்களும் இந்த வழியில் அறிவுசார் பரிமாற்றத்தின் முக்கிய மையங்களாக மாறின. .

‘Silk Road’ சீனாவின் ஜியானில் உருவானது, 4000 மைல்கள் நீளும் இந்த பாதை பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இத்தாலிய ஆய்வாளர் மார்கோ போலோ 13 ஆம் நூற்றாண்டில் ‘Silk Road’ கடல்வழி சாலையை பின்தொடர்ந்தார், சீனாவுக்குச் சென்ற முதல் ஐரோப்பியர்களில் ஒருவரானார். இந்த வழித்தடத்தை பயன்படுத்தி அதிக லாபம் பெரும் சில நபர்கள் மீது கோவம் பலரால் ‘Silk Road’ ஒரு ஆபத்தான பாதை, அந்த பாதையை கடப்பவர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகிறார்கள் அவ்வழி செல்பவர்களுக்கு பிளேக் நோய் பரவுகிறது என்று கட்டுக்கதைகளை அவிழ்க்க இந்த பாதை பயனற்றதாகி போனது.

இருப்பின் இதுவரை கண்டறியப்பட்ட பழமையான உலகின் மிக நீளமான கடல்வழி வாணிப பாதை இதுவே என்பது நிதர்சனம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of