அண்ணனை முந்தும் தம்பி! சிம்பு வீட்டில் நடக்கும் ரகசியம்!

1254

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பெரிதும் ஆர்வமாக எதிர்பார்த்த இரண்டு முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் விஷாலின் திருமண அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின.

இதனால், அடுத்து சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் சிம்பு வீட்டில் திருமண வேலைகள் ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் அது சிம்புவுக்கு இல்லை என்றும், அவரது தம்பிக்கு தான் என்றும் நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சுpம்புவின் தம்பி குறளரசன் சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அப்போதே அவர் மாதம் மாறியதற்கு காரணம் காதல் என்ற தகவல் வந்தது.

தற்போது குறளரசனுக்கு வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி எளிமையாக திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement